மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!

Sunday, October 16th, 2016

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் எற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் செயற்பாடு தற்போது முழுமையாக தடைப்பட்டுள்ளது.

இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்று அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அனல்மின் நிலையத்தின் மூன்று இயந்திரங்களையும் மீள செயற்படுத்த இரண்டு வாரங்கள் செல்லுமென்றும் அவர் கூறினார். இயந்திரங்களை திருத்துவதற்கு சீனாவிலிருந்து அதிகாரிகளை வரவழைக்க வேண்டியுள்ளது என்றும் அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவித்தார்.

save-power

Related posts: