மாநகர சபையின் நிபந்தனையை மீறிச் செயற்பட்ட சிற்றங்காடிகள் இரண்டுக்கு எதிராக நடவடிக்கை!

Wednesday, January 17th, 2018

யாழ்ப்பாண மாநகர சபையின் நிபந்தனையை மீறி செயற்பட்ட இரண்டு சிற்றங்காடிகளை தற்காலிகமாக மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் மாநகர சபையால் சிற்றங்காடி வர்த்தகர்களுக்காக கடைத் தொகுதி அமைக்கப்பட்டு அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. கடைகள் வழங்கப்படும் போது வர்த்தகர்கள் அதனை விற்பனை செய்யவோ அல்லது வேறு நபருக்கு வாடகைக்கு விடவோ அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சபையின் நிபந்தனையை மீறி செயற்பட்ட இரண்டு சிற்றங்காடிகளுக்கு எதிராக மாநகர சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் மாநகர சபையின் நடவடிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் மாநகர சபையால் தமது நடவடிக்கை தொடர்பில் பொலிஸாருக்கு தெளிவுபடுத்தப்பட்டது என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: