மனிதாபிமானம் மிக்க கொள்ளையர்கள்!

முதியவர்கள் தனித்திருந்த வீட்டில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் வீட்டிலிருந்த முதியவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே தண்ணீர் கொடுத்து மட்டை விசிறி அவரை அசுவாசப்படுத்தினார். எனினும் பணம், நகைகளை கொள்ளையடித்தனர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை கிளிநொச்சி, முரசுமோட்டை பழைய கமத்தில் நடந்துள்ளது.
முகத்தை மறைத்துக் கட்டியவாறு நேற்று அதிகாலை கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை கொட்டன்களால் அடிப்போம் என பயமுறுத்தி வீட்டிலிருந்த 20ஆயிரம் ரூபா பணம், 5 ½ பவுண் நகைகளைக கொள்ளையடித்துள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். “நாய்கள் குறைத்துக் கொண்டிருந்தன, நான் வெளியில் வந்து பார்வையிட்ட போது திடிர் என்று கொட்டன்களுடன் நுழைந்த மூவர் எனது கைகளைப் பிடித்தவாறு சத்தம் போட்டால் அடிப்போம் என்று கொச்சைத் தமிழில் கூறினர். பின்னர் வீட்டுக்குள் வந்தனர். எனது கணவனையும், என்னையும் பிடித்து ஓர் இடத்தில் இருத்திவிட்டு வீட்டின் மின்குமிழ்களை அடித்துடைத்து 30 நிமிடமாக வீட்டைச் சல்லடை போட்டு தேடினர். வீட்டிலிருந்த 20ஆயிரம் ரூபா பணம் மற்றும் 3பவுண் சங்கிலி, 2பவுண் சங்கிலி, ½ பவுண் மோதிரம் உள்ளடங்கலாக 5 ½ பவுண் நகைகளைக் கொள்ளையடித்தனர். கொள்ளையர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தபோது எனது கணவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கொள்ளையர் ஒருவர் குடிப்பதற்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து மட்டை எடுத்து விசிறினார்.” – என்று வீட்டில் இருந்த வயோதிபப் பெண் தெரிவித்தார்.
Related posts:
|
|