பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

Friday, April 8th, 2016

அண்மைக் காலங்களில் பதவி வகித்த பொலிஸ்மா அதிபர்கள் அனைவருக்கும் முன்மாதிரியான பொலிஸ்மா அதிபராக என்.கே.இளங்ககோன் பணியாற்றினார் என்பதுடன்  அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று முற்பகல்(7) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியை சந்தித்த பொலிஸ்மா அதிபர் தனது ஓய்வு பெறுதல் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

சுமார் ஐந்தாண்டு காலம் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய இவருக்கு ஜனாதிபதி இதன் போது வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், 33 ஆவது பொலிஸ்மா அதிபராக சேவையாற்றிய என்.கே.இளங்ககோன் எதிர்வரும் 11ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: