பொலிஸாரிடம் சிக்கிய யாழ். இளைஞர்கள் !

Tuesday, October 31st, 2017

யாழ்ப்பாணம் மடத்தடி வீதியில் வாள்களுடன் நின்ற 4 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் நேற்று இரவு 11 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் 4 இளைஞர்கள் வாள்களுடன் வீதியில் நின்றுள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதுடன், இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் யாழ். மடத்தடி மற்றும் இராசாவின் தோட்டம் வீதிப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நால்வரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: