பெண் முயற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்!
Friday, July 27th, 2018அமெரிக்க தகவல் கூடத்தினால் சிறு கைத்தொழில் மேற்கொண்டு வரும் பெண் முயற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இப்பயிற்சி வகுப்புகளின் முக்கிய நோக்கமாக சிறு கைத்தொழில் மேற்கொண்டு வரும் மற்றும் வளர்ந்து வரும் பெண் முயற்சியாளர்களுக்கு சந்தைப்படுத்தல், தொழில் யுக்திகள், வியாபார நுணுக்கங்கள் மற்றும் வியாபாரத்தில் நிலைத்து நிற்பதற்கான நுணுக்கங்கள் சம்பந்தமான பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும்.
மேலும் இப்பயிற்சி வகுப்புக்கள் அனைத்தும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாலும் வியாபாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாலும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்புக்கள் அனைத்துமே இலவசமாக இடம்பெறவுள்ளன.
இப்பயிற்சி வகுப்புக்களின் இறுதியில் அமெரிக்க தூதரகத்தினால் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்புக்களில் இணைய விரும்புவோர் அமெரிக்க தகவல் கூடம், இல 23, அத்தியடி வீதி, நல்லூர் என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். பதிவு செய்வதற்கான இறுதித்திகதி ஆவணி 5 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|