பாணின் விலை உயர்த்தப்படாது !

Thursday, December 29th, 2016

பாணின் விலை உயர்த்தப்படாது என திறைசேரி அறிவித்துள்ளது. பாண் மற்றும் பணிஸ் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என திறைசேரியின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனி மற்றும் பாம்எண்ணெய் ஆகியனவற்றின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த வரி உயர்விற்கு சமாந்தரமாக வெதுப்பக உற்பத்திகளை அதிகரிக்க நேரிடும் எனவும் வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், உள்நாட்டில் சில்லறை விலைகள் உயர்த்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள திறைசேரியின் அதிகாரி உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அத்துடுன் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை உயர்த்த இடமளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

paann-720x480

Related posts: