பாடசாலை நேர மாற்றத்தால் மாணவர் சிரமம்!

Friday, January 6th, 2017

பாடசாலைகள் தற்போது காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளற்ற மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் பிள்ளைகள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தை தெற்கைப் போன்று வடக்கிலும் நடைமுறைப்படுத்த முனையும் அதிகாரிகள். அரசியல்வாதிகள் தெற்கைப் போன்று எமது பகுதிகளிலும் சீரான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். உரிய போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படாத பட்சத்தில் எமது பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு இடைவிலக வேண்டிய ஆவல நிலைக்கு ஆளாக வேண்டி வரும் – என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

oHjlduy

Related posts: