நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரம் – அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்
நாட்டில் அடிக்கடி காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மழையுடனான நிலை காணப்படுவதால் இந்த தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் குறித்த தரப்பினரால் சட்டிக்காட்டப்பட்டள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 16 ஆயிரத்து 497 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜுலை மாதம் 3 ஆயிரத்து 29 பேரும், ஜுன் மாதம் 2 ஆயிரத்து 997 பேரும் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு இதேகாலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களைக் காட்டிலும் அதிகம் என்று சுகா◌ாதார தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் டெங்கு நோய் பரவல் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கணது.
000
Related posts:
|
|