நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ கடந்தது!

Sunday, June 20th, 2021

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் 54 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற 54 மரணங்களில் 31 ஆண்களினதும், 23 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.

30 வயதிற்கும் குறைந்த பெண் ஒருவரினதும், ஆண் ஒருவரினதும் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 6 பெண்களும், 5 ஆண்களும் மரணித்தனர்.

அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்ட 18 பெண்களும், 25 ஆண்களும் கொவிட்-19 தொற்றால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: