நாட்டில் இதுவரை 23 இலட்சத்து 91 ஆயிரத்த 683 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் வழங்கப்பட்டுள்ளது!
Friday, June 18th, 2021நாட்டில் இதுவரை 23 இலட்சத்து 91 ஆயிரத்த 683 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றையதினத்தில் (17) மாத்திரம் 11 ஆயிரத்து 349 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 43 ஆயிரத்து 40 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் 107 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 3 இலட்சத்து 56 ஆயிரத்து 610 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2 ஆயிரத்து 865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|