தேசிய சமூக அபிவிருத்தி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரால் 2018 ஆம் ஆண்டு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்கை வகுப்புகள் கிளிநொச்சியில் உள்ள வடபிராந்திய நிறுவனத்தில் இடம்பெறும் எனவும் ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியெய்தியவர்கள் விண்ணப்பிக்கமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகப்பணி டிப்ளோமா, பெண்கள் அரசியல் வலுவூட்டல் டிப்ளோமா, உளவளத்துணை டிப்ளோமா, சமூகப் பராமரிப்பு டிப்ளோமா, முதுமையியல் மற்றும் முதியோர் பராமரிப்பு டிப்ளோமா, சைகை மொழி மொழிபெயர்ப்பு டிப்ளோமா போன்ற கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் விண்ணப்பிக்க விரும்புவோர் கிளிநொச்சியிலுள்ள வடபிராந்திய நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களுக்கு திடீர் சுகவீனம்?
சிறுவனின் உயிரைப் பறித்த பலூன்!
நிரந்தர நியமனத்தை விரைவில் தருமாறு யாழ். தொண்டர் ஆசிரியர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!
|
|