தெற்கில் பதற்றத்தை ஏற்படுத்திய பொருள் எரிகல்லாம்?

Friday, October 20th, 2017

தென்மாகாணத்தில் சில இடங்களில் இடம்பெற்ற பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடனான பொருள் எரிகல்லாக இருக்ககூடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் நட்சத்திர மற்றும் வானிலை பீடத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான எரிகல் ஒரு செக்கனில் 65 கிலோமீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி செல்லக்கூடியது. இவ்வாறு செல்லும்போது பூகோளத்தில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக ஒட்சிசனுடன் மோதி நெருப்பு பிளம்பாக மாறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: