திரைப்பட விருது விழா இன்று!

Thursday, December 15th, 2016
இலங்கையில் திரைப்படதுறையில் சாதித்தவர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் சரசவிய திரைப்பட விருது விழா இன்று நடைபெறவுள்ளது.

அசோசியேட்டட் நியூஸ்பேப்பர் ஒவ் சிலோன் லிமிட்டட் மற்றும் அதன் வாராந்த சினிமா இதழான சரசவியவுடன் இணைந்து நெலும்பொக்கன கலையரங்கில் ஏற்பாடுசெய்துள்ள இந்த விருது வழங்கும் விழாவிற்கு பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

எட்டு வருடங்களின் பின்னர் இடம்பெறும் இந்த சரசவிய விருதுவழங்கும் விழா 33வது சரசவிய விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கது.

9d2e72fd9e52f0d3a64f0e88aab808fc_L

Related posts: