திருகோணமலைத் துறைமுக விவகாரம் – இந்தியா வாங்கத் தயாரில்லையாம்!

Tuesday, January 24th, 2017

திருகோணமலைத் துறைமுகத்தின் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிஸர்லாந்து விஜயத்தின் போது, இந்திய ஊடகம் ஒன்றை சந்தித்த வேளை, திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடி வருவதாக கூறியிருந்தார்.

எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த ஒப்பந்தத்திற்கு இந்தியா தயாராக இல்லை என, கடந்த வௌ்ளிக்கிழமை அந்த நாட்டு அரசாங்கத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வௌியிட்டது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கும், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கும் வழங்கி இராஜதந்திர ரீதியில் இரு நாட்டு உறவுகளையும் சமமாக பேண இலங்கை அரசியல்வாதிகள் முற்பட்டாலும், அந்த ஒப்பந்தத்திற்கு இந்தியா தயாரில்லை என இந்தியத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், திருகோணமலை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதனால் நீண்ட கால அடிப்படையில் பெரும் நன்மைகள் கிட்ட வாய்ப்பில்லை என இந்தியா கருதுவதாகவும் நியூ இந்தியன் எக்பிரஸ் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பையும் இதே காரணத்திற்காகத்தான் இந்தியா மறுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

596895430Untitled-1

Related posts: