தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
Tuesday, January 17th, 2017
அரச அங்கீகாரம் பெற்ற தனியார் தாதியர் பயிற்சி நிறுவனம் ஒன்று இந்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தாதியர் நெறிக்காக ஆள்களை இணைத்துக் கொள்ளவுள்ளது. யாழ்.மாவட்டச் செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தால் தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றக்கொடுக்கும் செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே இந்த தேர்வு இடம்பெறவுள்ளது. இது தமிழ் மொழி மூல கட்டணத்துடனான ஒரு வருட பயிற்சியாகும்.
நேர்முகத் தேர்வு எதிர்வரும் 19ஆம் திகதி வியழக்கிழமை காலை 9 மணிக்கு பழைய பூங்கா வீதியிலுள்ள, மாவட்டச் செயலக முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலதிக விளக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் நேரடியாகவும் 021 221 9359 இலக்க அலுவலக தொலைபேசி ஊடாகவும் பெற்றுக்கொள்ளாலம் சான்றிதழுனான இந்தப் பயிற்சியின் ஊடாக உள்நாட்டு, வெளிநாட்டு வைத்தியசாலைகளில் சேவையில் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|