தமிழக அதிகாரிகளினால் 8.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 8.7 கிலோ தங்க கட்டிகளை தமிழ் நாட்டின் ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரவு தமிழக அதிகாரிகள் கைப்பற்றியிருப்தாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ராமேசுவரம் வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை ; புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சனிக்கிழமை நள்ளிரவு ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
உச்சிப்புளி ரயில்வே கடவு பகுதி வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஓட்டுநரின் இருக்கைக்கு அடியில் தலா 100 கிராம் எடையுள்ள 87 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சாரதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது போது, அவரது பெயர் முஜிபுர் ரகுமான் (31) என்பது மட்டும் தெரிய வந்ததுள்ளது
இலங்கையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் இந்த தங்கம் ராமேசுவரம் கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|