ஜேர்மன் நாட்டு யுவதி ஆபத்தான நிலையில்!

Tuesday, January 30th, 2018

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஜேர்மன் நாட்டு யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த பெண் கித்துல்எல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுத்து கொண்டிருக்கும் போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

மேலும் அவர் ஜேர்மன் நாட்டு பல்கலைக்கழக மாணவி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: