செவ்வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்த நவீன செய்முறையும் பயிற்சி வகுப்பும்!

Thursday, October 6th, 2016

தென்னையின் செவ்வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நவீன செய்முறையும் பயிற்சி வகுப்பும் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.சத்தியேந்திரன் தலைமையில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இன்று காலை 9.30மணிக்கு உசன் செல்வநாயகம் தோட்டத்திலும் முற்பகல் 11மணிக்கு விடதற்பளை கிராம அலுவலர் காரியாலயத்திலும் பிற்பகல் 2மணிக்கு கெற்பெலி பொதுநோக்கு மண்டபத்திலும் இடம்பெற்றது.

நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30மணிக்கு கொடிகாமம் வடக்கு பருத்தித்துறை வீதி யோகராசா தோட்டத்திலும் முற்பகல் 11மணிக்கு குடமியன் சப்ரு தோட்டத்திலும் பிற்பகல் 2மணிக்கு மிருசுவில் பொதுநோக்கு மண்டபத்திலும் இடம்பெறும். அனைத்து சாவகச்சேரி பிரதேச தென்னைச் செய்கையாளர்களையும் கலந்து கொண்டு பயனடையுமாறு தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் அறிவித்துள்ளார்.

தென்னை3-1050x600

Related posts: