சண்டிலிப்பாயில் இளைஞன் மீது கத்தி வெட்டு!
Saturday, December 1st, 2018
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை வழிமறித்து மோட்டார் சைக்கிளை பறிக்க முற்பட்ட இனந்தெரியாத நபர்கள் இருவர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் நேற்று சண்டிலிப்பாய் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 8.00 மணியளவில் கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் சண்டிலிப்பாய் சந்தியால் வந்துள்ளார். அவரை வழிமறித்த இரு இளைஞர்கள் அவரது மோட்டார் சைக்கிளைத் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு இளைஞர் மறுக்கவே அவர்கள் வைத்திருந்த கத்தியால் இளைஞரை தாக்கியுள்ளனர்.
அப்போது எதிரே வாகனம் ஒன்று வருவதை அவதானித்த இளைஞர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த இளைஞர் தானாகவே யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார்.
பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
|
|