சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக காலிங்க இந்ததிஸ்ஸ!

Thursday, February 21st, 2019

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் 4677 வாக்குகளை பெற்றுள்ளதுடன் அவருக்கு எதிராக போட்டியிட்ட மஹிந்த லொகுகே 1415 வாக்குகளை பெற்றுள்ளார்.  அதனடிப்படையில் அவர் 3262 வாக்குகள் வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன் குறித்த சங்கத்தின் செயலாளரான சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தலைவர் மற்றும் செயலாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணியளவில் நாடளாவிய ரீதியில் 84 நிலையங்களில் இடம்பெற்றது.  நாடளாவிய ரீதியில் 15,806 சட்டத்தரணிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

Related posts: