கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை நாளை வரை நிறுத்தம்!

Monday, August 17th, 2020

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் 2 ரயில்கள் நாளை வரை சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மார்க்கத்தில் கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக இன்றும், நாளையும் ரயில் சேவைகள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 81 மற்றும் 82 இலக்கங்களை கொண்ட ரயில்கள் சேவையில் ஈடுபடவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: