குடித்தண்ணீர் விநியோகத்திற்கு 15 பவுசர்கள், 500 நீர்த் தொட்டிகள் உடனடியாகத் தேவை -அரச தலைவரிடம் கோரினர் மாவட்டச் செயலாளர்!

Saturday, January 21st, 2017

 

வடக்கின் வறட்சி நிலையை எதிர்கொள்வதற்கு 15 நீர்த்தாங்கி பாரவூர்திகளும் 400 நீர் விநியோகத் தொட்டிகளும் உடனடியாகத் தேவை என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

நாட்டில் நிலவும் வறட்சியை எதிர்கொள்வதற்கு உடனடியாக மாவட்டங்களின் தேவை மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து 25 மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடியதோடு மாவட்டத்தின் உடனடித் தேவைகள் தொடர்பிலும் அரச தலைவர் கேட்டறிந்தார்.

வடக்கின் சார்பில் கலந்து கொண்ட 5 மாவட்டச் செயலாளர்களும் வறட்சி தொடருமானால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இரு வகையான தேவைகள் முன்வைக்கப்பட்டன. இதில் குடிதண்ணீர் மற்றும் விவசாயம் தனித்தனியே முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் உடனடியாக குடிதண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதற்காக 15 பார ஊர்தியுடன் கூடியதான நீர்த்தாங்கிகளும் 400 நீர் விநியோகத் தொட்டிகளும் கோரப்பட்டுள்ளதுடன், வறட்சி நீடிக்குமாயின் மேலும் 26 உழவு இயந்திரங்களுடன் கூடிய நீர்த்தாங்கிகளும் 300 நீர் விநியோகத் தொட்டிகளும் தேவை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 பார ஊர்தி நீர்தாங்கி பவுசர்களும் 25 நீர் விநியோகத் தொட்டிகளும், முல்லைத்தீவுக்கு 2பார ஊர்தி நீர்தாங்கி பவுசர்களும் 40 நீh விநியோகத் தொட்டிகளும், கிளிநொச்சிக்கு 5 பார ஊர்தி நீர்தாங்கி பவுசர்களும, 200 நீர்விநியோகத் தொட்டிகளும், மன்னாருக்கு 6 பார ஊர்தி நீர்தாங்கி பவுசர்களும் 50 நீர்விநியோகத் தொட்டிகளும் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு 3 பார ஊர்தி நீர்தாங்கி பவுசர்களும் 100 நீர் விநியோகத் தொட்டிகளும் நீர் வடிகட்டுகளும் கோரப்பட்டுள்ளன.

இதேபோன்று வறட்சி தொடருமாயின் யாழ்.மாவட்டத்துக்கு மேலும் 15 உழவு இயந்திர நீர்த்தாங்கியும் முல்லைத்தீவுக்கு 4 உழவு இயந்திர நீர்த்தாங்கியும் கோரப்பட்டுள்ளதுடன் மேலதிக நீர்விநியோகத் தொட்டிகள் 5 மாவட்டங்களுக்கும் கோரபடபட்டுள்ளன. இதேபோன்று விவசாய நடவடிக்கைக்காக நீர்பம்பிகள், கால் நடைகளுக்கான நீர்த்தொட்டிகள் மற்றும் குழாய்க் கிணறுகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களும் அரச தலைவரிடம் முன்வைக்கப்பட்டன. உடனடித் தேவையாகக் கண்டறியப்பட்ட நீர் விநியோக பார ஊர்திகளும் நீர் விநியோகத் தொட்டிகளும் மாவட்டங்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tamil-Daily-News-Paper_6981623173

Related posts: