கல்விசாரா ஊழியர்களின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டது!

Sunday, August 7th, 2016
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாலில் கலந்து கொள்ளும் படி, நேற்றையதினம், தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாக, பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்த குறிப்பிட்டார்.
எது எவ்வாறு இருப்பினும், தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று இந்தக் கலந்துரையால் இடம்பெறாது எனவும், நாளைய தினம் வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும், உயர்கல்வி இராஜாங்க அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.

Related posts: