கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

Saturday, June 30th, 2018

இலங்கைத் தெரிழற்பயிற்சி அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், காரைநகர், கைதடி, சுன்னாகம், பண்டத்தரிப்பு, பருத்தித்துறை பயிற்சி நிலையங்களில் நடத்தப்படும் தொழிற்பயிற்சி கற்கை நெறிகள் முற்றிலும் இலவசமாக 09.07.2018 இல் ஆரம்பிக்கவுள்ளன. இக் கற்கை நெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை(NVQ) சான்றிதழுக்கான பயிற்சிகளாகும்.

இக்கற்கை நெறிகளை கற்க விரும்புவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம், 4 ஆம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல 12 கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம் (021 222 7949) அல்லது அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் எதிர்வரும் 06.07.2018 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என யாழ் பிராந்திய உதவிக் கல்விப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

Related posts:


ஊடக கண்காட்சிகளை நடத்தி ஜனாதிபதியாகவில்லை. வேலை செய்தே ஜனாதிபதி – ஜனாதிபதி கோட்டாபய சுட்டிக்காட்டு!
மின்சார சபை அடைந்துளு்ள இலாபம் தொடர்பில் அமைச்சர் காஞ்சனவின் கருத்து தவறானது - முன்னாள் மின்சாரத்துற...
பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!