ஓய்வூதியம் தொடர்பில் பதிவு செய்வதற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு!

Thursday, July 19th, 2018

விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமையின் கீழ் மீளப்பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமையின் கீழ் இதுவரையில் மூன்று இலட்சத்து 80 ஆயிரம் பேர் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் முடிந்த வரையில் விரைவாக தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஓய்வூதியம் பெறும் அரச சேவையாளர்கள் இதற்காக மீளப்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரச சேவைகளில் கடமை புரிவோர் மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். விதவைகள் உள்ளிட்டோர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமைகளை முறையாக முன்னெடுக்கும் பொருட்டு இணையத்தளத் தரவு கட்டமைப்பு ஒன்றை அமைப்பதே இதன் நோக்கமாகும்.

இதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணையாளர் நாயகம் ஜகத் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக நீதித்துறை பயிற்சி கல்லூரியை நிறுவுவதற்கு அமைச்ச...
பாவனையாளர் அதிகார சபையினுடைய செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் வினைத்திறனாக நடைமுறைப்படுத்து தொடர்...