ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகின்றது – அருந்திகவின் மகனிற்கும் அது பொருந்தும் – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Friday, February 4th, 2022

ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகின்றது அதுநாடாளுமன்ற உறுப்பினர் அருந்திகவின் மகனிற்கும் பொருந்தும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராகமமருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோவின் மகனிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் ஒருநாடு ஒருசட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அருந்திக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார், ஏதோ நடந்துள்ளது அவருடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார் ஆகவே நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேநேரம் சட்டத்தை மறைக்கவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் நாமல், அமைச்சரின் மகனாகயிருந்தாலும் சரி சாதாரண பிரஜையின் மகனாகயிருந்தாலும் சரி அவருக்கு எதிராக  ஒரேநாடு ஒரே சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் இதனையே ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது இன்று இடம்பெறுகின்றது -தவறு செய்திருந்தால் அவர் தண்டிக்கப்படுவார். அப்பாவி என்றால் நீதிமன்றில் அவர் தன்னை நிருபிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பகிடிவதையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும், எங்களால் ஒருபோதும் பகிடிவதையை அனுமதிக்க முடியாது-எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: