ஒமிக்ரோன் அச்சுறுத்தல் – பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படாமல் இருக்க மக்கள் பங்களிப்பே அவசியம் – இராணுவத் தளபதி அறிவுறுத்து!

Monday, December 6th, 2021

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என இராணுவத் தளபதி  ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கொரோனாவின் ஆபத்தான ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவுவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய மாறுபாடு குறித்து நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். எனவே முழுமையான பகுப்பாய்வுக்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: