எயிட்ஸ் வதந்தியில் சிக்குண்ட சிறுவனுக்கு கொழும்பின் பரபல பாடசாலையில் அனுமதி!

எயிட்ஸ் தொற்றுள்ளதாக வதந்தி பரவியதால் பாடசாலை அனுமதி மறுக்கப்பட்ட சிறுவனுக்கு கொழும்பிலுள்ள ஆனந்த கல்லூரி அல்லது கண்டியிலுள்ள கிங்ஸ்வூட் கல்லூரியில் அனுமதிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு கல்வி அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பிள்ளையை ஆனந்த கல்லூரியில் இணைத்துக்கொள்வதற்கு அதன் அதிபர் முன்வந்துள்ள நிலையில் கல்வி அமைச்சுக்கு பிரதமர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
கண்டியிலுள்ள பிரபல பாடசாலைகளான கிங்ஸ்வூட் மற்றும் ரினிட்டி கல்லூரி ஆகியன குறித்த சிறுவனை தமது பாடசாலையில் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இது குறித்து குடும்ப உறுப்பினர்கள் இதுவரை இறுதித் தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் ஏச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், அவ்வாறான ஒரு தகவல் வெறுமனே ஒரு வதந்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மீண்டும் வரும்போது நல்ல முடிவுடன் வருவேன் - முன்னாள் ஜனாதிபதி !
விசேட சுற்றிவளைப்பு; மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது!
தொடர்ந்தும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|