உறக்கத்திலிருந்த ஒரு வயது பெண் குழந்தை மரணம்!

Thursday, July 19th, 2018

பால் குடித்துவிட்டு நித்திரையில் இருந்த ஒரு வயது பெண் குழந்தை ஒன்று வாந்தி எடுத்த பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அரியாலை பூம்புகாரை சேர்ந்த பிரதீபன் பிரியங்கா என்ற ஒரு வயது குழந்தையே மேற்படி உயிரிழந்துள்ளது.

குழந்தை நேற்று மதியம் தாய்ப்பால் குடித்துவிட்டு நண்பகல் 12 மணி தொடக்கம் 5 மணி வரை நித்திரையில் இருந்துள்ளது. இரவு 7 மணிக்கு சளி தொண்டையில் இழுப்பதுபோல் இருந்துள்ளது பின்னர் 8.30 மணிக்கு வாந்தி எடுத்துள்ளது.

உடனடியாக குழந்தையை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் குழந்தையின் மூளையில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Related posts: