உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 10 ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும்- பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, June 24th, 2021

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை, ஜூலை மாதம் 10 ஆம் திகதிவரை இணைய முறைமையில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பரீட்சார்த்திகள், அதிபர் ஊடாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் நேரடியாக விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: