உணவகம் மீது ஆறு குற்றச்சாட்டு 30 ஆயிரம் அபராதம், சீல் வைப்பு!

Friday, February 2nd, 2018

ஆறு குற்றச் சாட்டுக்கள் உணவக உரிமையாளர்கள் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 24 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்ததுடன் உணவகத்தை சீல் செய்யுமாறும் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டார்.

கரவெட்டி சுகாதாரப் பகுதியினால் நெல்லியடி நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இனங்காணப்பட்ட உரிமையாளருக்கு எதிராக நெல்லியடி சுகாதார பரிசோதகர் சு.ரவிவர்மாவால் ஆறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகளை குறித்த உணவக உரிமையாளர் ஏற்றுக் கொண்டதையடுத்து மேற்படித் தீர்ப்பினை நீதவான் வழங்கினார்.

Related posts: