உடனடியாக தடுப்பூசியை பெற்றக்கொள்ளுங்கள் ; பொதுமக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்து!

வேகமாகப் பரவி வரும் கொவிட்-19 டெல்டா திரிபிலிருந்து உயிரிளப்புகளை தவிர்ப்பதற்காக உடனடியாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு நபருக்கும் நோய் தாக்கும் அபாயம் உள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையில் தொற்றுக்குள்ளானவர்களில் 1.5 வீதமானோர் இறக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வைரஸ் தொற்றைத் தவிர்க்க சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்களை கடுமையாகப் பின்பற்றுமாறும் அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி!
வடமராட்சியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை –சந்தேகநபர் கைது!
அத்தியாவசிய சேவை ஊழியர்கள் பயணிக்க தடையில்லை - பிரதி பொலிஸ் மா அதிபருமா அதிபர் அறிவிப்பு!
|
|