இலங்கை வங்கி செயற்படுத்தும் சிறுவருக்கான முதலீட்டுத் திட்டம்!

இலங்கை வங்கியினர் பவர் பிளஸ் என்னும் மாதாந்தப்பணம் செலுத்தக்கூடிய வகையிலான சிறுவர் முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் 5லட்சம் ரூபா தொடக்கம் 50லட்சம் ரூபா வரையான தொகைக்கு மாதாந்தம் கட்டணம் செலுத்த முடியும். முதலீட்டுக் காலப்பகுதியில் வைப்புத் தொகைக்கு 8வீத வட்டி வழங்கப்படும். வாடிக்கையாளரால் செலுத்தக்கூடிய மாதாந்த வைப்புத் தொகைக்கமைய முதலீட்டுத் திட்டங்களைத் தெரிவு செய்யலாம்.
பிள்ளைக்கு 18 வயது நிரம்பிய பின்னர் எதிர்பார்த்ததைப் போன்று உயர் வருமானங்களைப் பெற்றுக் கொள்ளலாம். குழந்தைக்குப் பதிலாக பெற்றோர், பாதுகாவலர் அல்லது வேறெந்த நபரும் கணக்கை ஆரம்பிக்க முடியும். ஒவ்வொரு மாதத்திலும் கணக்கு ஆரம்பிக்கப்பட்ட திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக மாதாந்த வைப்புகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆகக்கூடியது 6 மாதங்களுக்கு ஒழுங்கற்ற விதத்தில் வைப்புகள் மேற்கொள்ளப்பட்டால் முதலீட்டுத் திட்டம் செல்லுபடியற்றதாக்கப்பட்டு நிலுவையிலுள்ள தொகை குழந்தையின் பெயரில் ரண் கெகுளு கணக்கொண்றில் வைப்புச் செய்யப்படும். முதலீட்டுத் திட்டம் முதிர்வின் பின்னர் மீண்டும் நீடிக்க இடமளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்படவுள்ளது.
Related posts:
|
|