இந்தியா செல்ல நீதிமன்றிடம் அனுமதி கோரும் கம்மன்பில!.

Tuesday, October 4th, 2016

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில இந்தியா செல்ல அனுமதி தருமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மாதம் 13 ஆம் திகதி இந்தியாவில் புத்த மத கருத்தரங்கு ஒன்று இருப்பதால் இந்தியா செல்ல அனுமதி தருமாறு குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். கம்மன்பிலவின் கடவுச் சீட்டு வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால் இந்த கோரிக்கைக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா செல்ல அனுமதி பெற வேண்டுமாயின் குறித்த மனுவை கொழும்பு மேல்நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டு நிறுவனமொன்றின் பங்குகளை ஒப்பந்த அடிப்படையில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கம்மன்பிலவின் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

udaya_gamanpila_4.png

Related posts: