ஆளுந்தரப்பு எம்.பிக்களுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு!

Tuesday, September 12th, 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் முக்கிய சந்திப்புக்காக கொழும்புக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று இரவு 8 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு, ஜனாதிபதி செயலத்தால் நேற்று இரவு கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொலைபேசி ஊடாக விடுக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கபப்படுகிறது.அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது

Related posts: