அரசியலில் இருந்து ஒதுங்கிய  பஷீர் சேகுதாவூத்!

Wednesday, June 22nd, 2016
அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போட்டு விட்டு பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் நேற்று அறிவிப்புச் செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1981ஆம் ஆண்டில் இருந்து தொடங்கிய தனது அரசியல் வாழ்க்கையை இன்றோடு நிறைவு செய்து கொண்டுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் நடைபெறப்போகின்ற நாடாளுமன்ற, மற்றும் மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து முழுமையாக விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ள பஷீர் சேகுதாவூத் தான் இனி எந்தவொரு கட்சியிலும் தேசிய பட்டியலின் மூலமோ அல்லது எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது வேறு ஏதேனும் முறையில் நாடாளுமன்றத்திற்கோ அல்லது மாகாண சபைக்கோ மக்கள் பிரதிநிதியாக செல்லப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: