அம்புலன்ஸ் சாரதிகளுக்கு இந்தியப் பயிற்சி – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Tuesday, October 25th, 2016

இந்திய அம்புலன்ஸ் சேவையின் பணியாளர்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட பயிற்சி இலங்கை சுகாதார திணைக்களத்தின் அம்பியூலன்ஸ் சாரதிகளுக்கும் வழங்குவது சிறந்தது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அந்தப் பயிற்சியை வழங்குவது தொடர்பில் வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுட்ன பேச உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகின்றார்.  சுகாதார அமைச்சின் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

குறித்த அம்புலன்ஸ் சேவைக்கு தேவையான சாரதிகளை சுகாதார திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் யோசனை ஒன்று இங்கு முன் வைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சுகாதார செயலாளருக்கு அமைச்சர்ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

10979463781304708760rajitha-new2

Related posts: