அமைச்சு பதவியில் இருந்து என்னை நீக்க சதி முயற்சி – அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு!

மருந்துகள், புகையிலை ஏற்றுமதி நிறுவனங்கள் தன்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்க சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை குற்றம் சுமத்தியுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற உடற்பயிற்சி மைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
புகை பிடித்தல், மது அருந்துதல், சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகமாகவுள்ள உணவு பொருட்கள் காரணமாக 70 வீதமான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடத்தில் 35 ஆயிரம் பேர் மது மற்றும் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் ஐந்து சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கல்வி அமைச்சின் செயலாளர் !
கட்டணம் செலுத்தாதவிடின் குடிநீர் நிறுத்தப்படும் - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்ச...
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக...
|
|