அதிஷ்ட இலாப சீட்டு விலையில் அதிரடி மாற்றம்!

Monday, January 2nd, 2017

நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்களில் அதிஷ்ட இலாப சீட்டு விற்பனை முகவர்கள் தற்போது, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிஷ்ட இலாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விற்பனை முகவர்களுக்கு கிடைக்கும் தரகு பணத்தை அதிகரிக்க கோரியும் நாடளாவிய ரீதியாக அதிஷ்ட இலாப சீட்டு விற்பனை முகவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது 20 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதிஷ்ட இலாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

12524328_10208642890290828_4776006924399522213_n

Related posts: