அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம்!

Thursday, March 16th, 2017

அகில இலங்கை சமாதான நீதிவான்களாக ஓய்வு நிலை மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களான சின்னத்துரை இராஜதுரை, செபமாலை லொயிட் செல்வராஜா, செல்வநாயகம் தவேதன், கணேஸ்வரன் சதீஸ் ஆகியோர் யாழ் மாவட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் இழஞ்செழியன் முன்னிலையில் இன்றையதினம் சமாதான நீதிவான்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சங்கத்தின் சிரேஷ்ட நிலை அதிகாரிகள் 100 போரை கௌரவிக்கும்முகமாக இலங்கை நீதி அமைச்சினால் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கான நியமனங்களை வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நால்வரும் இன்றையதினம் யாழ் மாவட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் இழஞ்செழியன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: