வாழ்வாதாரம் மேம்பட உதவிட வேண்டும் – காட்டுப்புலம் கங்காதேவி கடல்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Friday, March 29th, 2024

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துவரும் தமது வாழ்வாதாரம் மேம்பட உதவிட வேண்டும் என சங்கானை காட்டுப்புலம் கங்காதேவி கிராமிய கடல்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்  கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று மாலை ( 29.03) இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் கூதுகையில் –

தமது பிரதேச கடல்றொழிலாளர் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாக  இறங்குதுறை இருந்துவருகின்றது.

அதனடிப்படையில் பல்வேறு காரணங்களால் தூர்ந்து கிடக்கும் இறங்குதுறைதை வான்தோண்டி தருமாறு கோரிக்கை விடுத்தனர்

மேலும் பிரதேசத்தில் வாழும் கடல்றொழிலாளர் வாழ்வாதாரம் மேம்பட புதிய தொழில்  முயற்சிகளை செய்வதற்கு உதவிகளை பெற்றுத்தருமாறும்  அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

குறித்த கடற்றொழிலாளர்களது கோரிக்கையின் நியாயத்தன்மையை கருத்தித்கொண்ட அமைச்சர் காலக்கிரமத்தில் அதற்கான தீர்வை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது – ஊடகவியலாளர் சந்திப...
மன்னாரில் கடலட்டை இனப் பெருக்க நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அங்குரார்ப்பணம்!
ஐ.ஓ.எம். பிரதிநிதி - அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு - வி.எம்.எஸ். கருவிகளை பொருத்தும் செயற்பா...