யாழ். தேசிய வைத்தியசாலைக்கு அடுத்த அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த நடவடிக்கை விரைவில் சாத்தியமாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர் –

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான இலகுகடன் உதவியாக ரூபா 50320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிலையமானது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்கள் மற்றும் கற்பவகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான விசேட சிகிச்சை பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் இரண்டு, கற்பவதிகளுக்கான விடுதிகள் இரண்டு, பெண் நோய்கள் விடுதி, தொற்றுநீக்கம் பிரிவு, செயற்கை கருத்தரிப்பு இரசாயன கூடம்,  கதிரியக்கவியல் பிரிவு என இந்த வைத்திய நிலையம் அமையப் பெற்றுள்ளது.

அத்துடன் சூரிய மின்சக்தி வசதி மற்றும் மின் பிறப்பாக்கி வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது கிளிநொச்சி வாழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.

இதேவேளை நேற்றையதினம்  ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி ஒன்று திறக்கப்பட்டது. அதுவும் பல வசதிகளை கொண்டதாக இருக்கின்றது.

அங்கு ஒரு கோரிக்கை அவரிடம் விடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்திய சாலையை தேசிய வைத்தியசாலை ஆக்குமாறு.

ஆனால் அதற்கு முன்பே ஜனாதிபதி என்னோடு அருகில் இருந்த உரையடிக்கொண்டிருக்கும்போது அந்த விடயத்தை  கூறி  அடுத்துவரும் அமைச்சரவையில் என்னை அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டு இருக்கின்றார்.

அந்த வகையில் அதை நான் முன்னெடுக்கவிருக்கின்றேன்.

அத்துடன் அப்படியான எண்ணம் அவருக்கு இருந்தமையை இட்டு அவருக்கு நான் எமது மக்களுடைய சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்

2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்த பொழுது தமிழ் மக்கள் அன்றே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால் அன்று தவறவிட்டுவிட்டோம்.

ஏனென்றால் தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு 2005 இருந்தது.

அன்று அந்த வாய்ப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு  கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாப் போன யுத்தமோ அல்லது இத்தனை துன்பங்களை துயரங்களை இடம்பெருவுகளை எமது மக்கள் சந்தித்து இருக்க மாட்டார்கள்.

அதே நேரம் எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி  நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக  நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம்.

இதேநேரம் நான் அடிக்கடி கூறி வருவதுபோன்று  இந்த நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்த பொழுது தென்னிலங்கை தலைவர்கள் பலரிடம் நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோரிக்கை விடுத்த பொழுது அவர்கள் எவரும்  அதை  பொறுப்பெடுக்க முன்வந்திருக்கவில்லை 
ஆனால்  ஜனாதிபதி ரணில் அதை பொறுப்பெடுக்க முன்வந்தார்.

நான் அவருக்கு சொல்வதுண்டு நீங்கள் ஒரு பிஸ்ரலோடு வந்து இன்று மல்டிபரில் ஆற்றலோடு இருக்கின்றீர்கள் என்று.

உங்களுக்கு தெரியும் இந்த நாட்டை ஜனாதிபதி  பொறுப்பெடுக்கின்ற பொழுது தென் இலங்கையில் அராஜகம் தலைவிரித்தாடி இருந்தது.  அதை தொடர விட்டிருந்தால் அது வடக்கு கிழக்குக்கும் பரவி இருக்கும்.

அதேநேரத்தில் எடுத்ததுக்கெல்லாம் வரிசையில் தான் நின்று பொருட்களை பெறக்கூடிய நிலைமை.

ஆனால்  கடந்த இரண்டு வருடதுக்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால் தன்னுடைய செயல்பாட்டால் எங்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கின்றர்.அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை முன்வைக்கின்றேன்.

இதேவேளை எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடைய செயல்பாட்டை பாராட்டி இருக்கின்றார்கள்.

அந்த வகையில் எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து  பயணிப்பதற்கு ஊடாகவும்  எமது மக்கள்  எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன்.

மேலும் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் நீண்ட காலமாக என்னுடைய கருத்துக்களை நான் பதிந்து வந்திருக்கின்றேன்.

அரசில் உரிமை பிரச்சினை என்பது நான் நீண்ட காலமாக சொல்லி வந்த இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிப்பது சிறந்த ஒரு ஆரம்பமாக இருக்க முடியும் என்று.

ஆனால் துரதிஸ்டவசமாக தமிழர் தரப்பு விட்ட  தவறுகளால் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இதேனேரம் நேற்று திறந்துவைக்கப்பட்ட யாழ் மருத்துவபீட கட்டடம், இன்று திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் பல்வேறு பற்றாக்குறைகள் ஆளணி பற்றாக்குறைகள் இருக்கின்றன.

அவற்றையும் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு நான் கொண்டு வந்திருக்கின்றேன். நான் மாத்திரம் இல்லை சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொண்டுசென்றிருக்கின்றனர்.

அதனடிப்பயில் அதற்கும் ஜனாதிபதி நிச்சயம் தீர்வு தருவார் என்று நம்புகின்றேன்.

அதோடு இந்தியாவோடும் ஒரு நெருக்கமான நில தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு அற்புதமான கொள்கையை ஜனாதிபதி முன் வைத்திருக்கின்றார்.

அதனால் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாக நாம்  விரைவில் கடந்த காலங்களிலிருந்து எமது வரலாற்றை  மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும்.

இதேநேரம் தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் பின்பு தேர்தல் வந்த உடனே அரசாங்கம் தங்களை ஏமாற்றி போட்டது என்று சொல்வதுண்டு. ஆனால் என்ன பொறுத்த வகையில் நான் அப்படி சொல்லப் போவதில்லை.
இதை நான் அரசாங்கத்தோடு பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி  நிச்சயம் பெற்று தருவேன் .

இறுதியாக  தமிழ் மொழியில் படிக்கின்ற வைத்திய மாணவர்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அவர்கள் படிக்கின்ற பொழுது  உணர்ச்சிவசமான கருத்துக்களையும் கொள்கைகளை முன் வைப்பார்கள். படித்து முடிந்த பின்னர் பட்டதாரிகள் ஆகின்ற பொழுது அவர்களில்  பெரும்பான்மையானவர்கள் தென்னிலங்கை சென்று தங்களது மேல் கல்வியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றார்கள் .

ஆனபடியினால் தயவுசெய்து நீங்கள் உங்களுடைய பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது இந்த மாகாணத்தில் சேவையாற்றும் வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000


000

Related posts:


மக்கள் நலன்களை முன்னிறுத்தி சேவையாற்றுங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான விசேட...
மக்களின் வாழ்க்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் நன்மை தரக் கூடிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி – ...