மன்னாரில் கடலட்டை இனப் பெருக்க நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அங்குரார்ப்பணம்!

Tuesday, March 30th, 2021

மன்னார் ஓலைத்தொடுவாயில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை இனப் பெருக்கநிலையத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜசேகர ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ளனர்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டுள்ள உயர்மட்ட குழுவினர் பிரசன்னத்துடன்குறித்த நிகழ்வு இன்றுகாலை இடம்பெற்றது.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்தை மற்றும் மீன்பிடிக் துறைமுக அதிகார சபையின் தலைவர் ஆகியோர் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையோடு வடக்கில் பாரிய கடல்சார் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

Related posts:

மக்களின் அபிலாசைகளையே கட்சியின் தீர்மானங்களாக எடுத்துவருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!
இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் - நாடு திரும்பியவர்கள...
பெங்களூர் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிட...