மண்ணெண்ணை விநியோகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை – மீறுகின்றவர்களின் அனுமதி இரத்து – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Friday, May 27th, 2022

கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்காத எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் அனுமதி இரத்து செய்யப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையினை தொடர்ந்து, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக முதற் கட்டமாக ஒரு தொகுதி மண்ணெண்ணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும், மன்னார் மாவட்டத்தில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில், மண்ணெண்ணை விநியோகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சம்மந்தப்பட்ட பிரதேச கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்காகவே ஒரு தொகுதி மண்ணெண்ணை வட பகுதிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

அதில் 90 வீதமானவை கடற்றொழிலாளர்களுக்கே விநியோகிக்கப்பட வேண்டும்.

அதற்கு யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது. மாறாக யாராவது செயற்பட்டால், அவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதி இரத்து செய்யப்பட வேண்டும் ” என்று தெரிவித்தார்

Related posts:

வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - செயலாளர் நாயகம் ட...
அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றி கொள்ளுங்கள் - ஒலுமடுவில் டக்ளஸ் எம்பி தெரிவிப்...