மக்கள் நலன்சார் நாடாளுமன்ற செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முதலிடம்!

மக்கள் நலன்சார் நாடாளுமன்ற செயற்பாடுகளில் அதிகளவான பங்களிப்பு செய்தவர்கள் தொடர்பில் MANTHRI.LK இணையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அதிகூடிய பங்களிப்பு செய்தவர்களின் பட்டியலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடளாவிய ரீதியில் 6 ஆவது இடத்தையும் யாழ் மாவட்டத்தில் 1 இடத்தையும் பெற்றுள்ளார்.
மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அதிக அக்கறையுடன் நாடாளுமன்றுக்கு கொண்டுசென்று அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க பங்களிப்பவர்கள் தொடர்பில் MANTHRI.LK இணையத்தளம் ஆய்வுகளை மேற்கொண்டு அவர்களை தரவரிசைப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள பதிவில் இலங்கையின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தரவரிசையில் 6 ஆவது இடத்தை பெற்றுள்ளார்
அத்துடன் தாமிழ் மக்களின் சார்பில் அதிக அக்கறையுடன் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் பங்களிப்பை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் வரிசையில் 1 ஆவது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.
இதற்கான கௌரவிப்பும் சான்றிதழும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|