போராளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பேன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவிப்பு

Saturday, November 17th, 2018

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களில் பலர் என்னுடன் தொடர்புகொண்டு நீங்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைகளை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் என்பதையும் நான் கவனத்தில் கொண்டுள்ளேன். எனவே சமூகத்துடன் இணைக்கப்பட்டு, பொதுவாழ்வில் இருக்கும் உங்களுக்கு சுய தொழில் செய்யவும், வருமானம் ஈட்டக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ளவும் எனது அமைச்சின் கீழ் வருகின்ற புனர்வாழ்வு அதிகாரசபையின் ஊடாக இலகுகடன் வசதிகளை வழங்கவும், அத்துடன் மேலதிக உதவித் தொகைகளைப் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுத்துவருகின்றேன். எனவே இதுவரை அவ்வாறான உதவிகள் கிடைக்காதவர்கள் உங்கள் கோரிக்கையை நீங்கள் வாழும் பிரதேசசெயலாளர்கள் ஊடாக எனக்கு முகவரி இட்டு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எனவே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் காலம் தாழ்த்தாது உங்கள் கோரிக்கைகளை உங்கள் பிரதேசசெயலாளர் ஊடாக எனக்கு கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Related posts:

வாழ்வின் இருப்பே கேள்விக்குறியாக இருந்தபோது கரங்கொடுத்து தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா - புங்...
தொடரும் சீரற்ற காலநிலை - கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெ...
இந்திய மீன்படியாளர்களின் சட்டவிரோ கடற்றொழிலை கண்காணிக்க “கடல் சாரணர்” படையை நிறுவுவதற்கு விரைவில் அம...