புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்பு!

Wednesday, August 12th, 2020

இன்றையதினம் நியமனம் வழங்கப்பட்டுள்ள 28 அமைச்சர்களைக் கொண்ட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே ஒரு சிறுபான்மையின தமிழ் அமைச்சராக கடற்றொழில் அமைச்சராக இன்றையதினம் பதவியேற்றுள்ள  டக்ளஸ் தேவானந்தா காணப்டுகின்றார்.

குறித்த பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை கண்டி, மகுல்மடுவவில் இடம்பெற்றது.

இதன்போது கடற்றொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றிருந்தார்.

அத்துடன்  நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், 39 ராஜாங்க அமைச்சர்களில் இரண்டு சிறுபான்மையின பிரதிநிதிகளுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அத்துடன் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை 28 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையில் முதன்முறையாக அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள மூன்று புதுமுக பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனனர்..

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷவும், நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் வலுசக்தி அமைச்சராக உதய கம்மன்பிலவும நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: