திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் – அதிகாரிகளுடனான கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டக்கூடிய தொழிற்சாலையாக மாற்ற அனைத்து முன்னகர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் எனது அமைச்சின் ஊடாக மேற்கொள்ள நான் தாயாராக இருக்கின்றேன் என புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இன்று அமைச்சின் அலுவலகத்தில் குறித்த துறைசார் அதிகாரிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
பனைவளத்தின் பயனானது பல்வேறு வடிவங்களில் எமது மக்களிடையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டுக்கும் எமது மக்களுக்கும் அந்தந்த பிரதேசங்களுக்கும் இவ் வளமானது பல நன்மைகளை வழங்கிவருகின்றது. அந்தவகையில் மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் அதன் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமையவேண்டும்.
அத்துடன் திக்கம் வடிசாலையை நவீன இயந்திரங்களுடன் இணைத்து அங்கு உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகள் தரமானதாகவும். சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையின் தரத்திற்கு அமைவாக அமையவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
|
|