சுபீட்சத்தின் வீட்டை பயனாளிக்கு கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 29th, 2021

கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம் எனும் அரசாங்க திட்டத்திற்கு அமைவாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பளை நகர் பிரதேசத்தில் பயனாளர் ஒருவருக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டினை கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் ஆதரவு தாராளமாக இருந்திருக்குமாயின் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்திருந்தார்.

பளை நகரில் ‘கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம்’ எனும் அரசாங்க திட்டத்திற்கு அமைவாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பயனாளர் ஒருவருக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டினை இன்று சம்பிரதாயபூர்வமாக கையளித்து உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

Related posts:

வடக்கில் சில தமிழ் அரசியல் வாதிகளால் மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடு  ஏற்படுத்தப்பட்டுள்ளது - செயலாள...
இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகா...
கடலோரங்களில் பிதிர்க் கடன்களை செலுத்தலாம் – அமைச்சரவையை இணங்கச் செய்தார் அமைச்சர் டக்ளஸ்!